தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே மக்களிடத்தில் நிலவுகிறது. இதை சரி செய்வதற்கு அரசாங்கமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உணவு பொருள் வழங்கல்  துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அனைத்து நியாய விலை கடைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, ரேஷன் கடைகளில் மாநில அரசால் வழங்கப்படும் அரிசிக்கு ஒரு ரசீதும், மத்திய அரசால் வழங்கப்படும் அரிசிக்கு ஒரு ரசீதும் என 2 ரசீதுகள் கொடுக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றாமல் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கினால் அதற்குண்டான வேறுபாடு தொகையை அரசுக்கு செலுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பாவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த 2 ரசீது முறையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.