தமிழகத்தில் இனி டாஸ்மாக் கடைகள் 12 – 10 மணி வரை மட்டுமே இயங்கும்…. அமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பாடு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இனி தமிழக மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த மதுபான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அதிக அளவிலான விற்பனை விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply