பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் இன்னும் மீளாமல் இருக்கிறது.
அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் வருகிற திங்கட்கிழமை முதல் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.