தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டமன்றத் துறை சார்ந்த அறிவிப்பின்போது இந்து சமய அறநிலையத்துறையில் நிலையான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் ஓய்வூதியம் பெறும் நபர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு 2000 ரூபாய் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இதனை அமல்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திருக்கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குடும்ப ஓய்வூதியத்தை 1500 ரூபாயில் இருந்த 2000 ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அறநிலையத்துறை பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.