செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் போட்டி போடுறேன். ஏன் உன் கட்சி நாலு அஞ்சு இடத்துல போட்டியிடும் இல்ல. அன்பு தம்பி அவங்கள போட்டியிட சொல்லுங்க. ஊழல் அமைச்சர ஊழல் பட்டியல வெளியிட்ட நீங்க அவங்கள தோற்கடிங்க. இப்போ உங்க கட்சியில் ஊழல் இருக்கா ? இல்லையா ? தம்பி. மகாராஷ்டிரா மாநிலத்துல நீங்க கவனிங்க… மகாராஷ்டிரா மாநிலத்தில 42 சட்டமன்ற உறுப்பினர்கள நீங்க விலை கொடுத்து வாங்கினீங்க.

ஒரு ஒரு உறுப்பினருக்கு 132 கோடி 5000 க்ரோர்ஸ் கிட்ட வருது. இதுக்கு பேரு என்னங்க ஐயா என்னமோ… நீங்க ஆள்கிற ஸ்டேட்ல எல்லாம் ஊழல் ஒழிஞ்சி போச்சு… கல்வி முழுமையா குடுத்தாச்சு… வேலை வாய்ப்புகள் எல்லாம் வந்தாச்சு…. மருத்துவம் தரம்… ஏய்  உத்தரப்பிரதேசத்துல தரையில படுத்து கிடக்கிறான். குளுக்கோஸ் ஏத்துறதுக்கு ஸ்டாண்ட் கிடையாது. கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறது.

ஒரு குளுக்கோஸ் ஏறி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும். உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த கை வலிக்க அடுத்த   கைல பிடிக்குது. அந்த கையும் வலிக்க.. திரும்பவும்  அதே கைல பிடிக்குது. கேவலம் மனைவி செத்து போயிட்டா தூக்கிட்டு போக முடியல.  ஆம்புலன்ஸ் இல்ல, அவசர ஊர்தி கிடையாது, சைக்கிள்ல பார்ல கட்டி தொங்க விட்டுட்டு போறான் துணியை சுத்தி…  உங்களுக்கு தெரியும். அம்மாக்கு உடம்புக்கு முடியல ரெண்டு பேரு தோள்ல  துணி மாதிரி கட்டி தூக்கிட்டு போனது நடந்திருக்கு.

நீ இன்னும் பேசிட்டு இருக்க. நீனு ஊழல் லஞ்சத்தை பத்தி… ராஃபெல் போர் விமானம் வாங்கினீங்க ஊழல் இருக்கா ? இல்லையா ? அப்போ உங்களை எதிர்த்து யார் போராடறது? திமுகவில் ஊழல் நான் வரவேற்கிறேன் அதிமுகவில் இருக்கா ? இல்லையா ? நான் கேள்வி கேட்கிறேன்..  உங்க கட்சில இருக்கின்ற  ஊழலை சொல்ல முடியாது ? கர்நாடகாவில் நீங்கள் தோத்ததுக்கு காரணமே நீங்க செஞ்ச… தவிர்க்க முடியாத… சகிக்க முடியாத ஊழல் தானே.

திமுக சொத்து பட்டியல வெளியிட்டிங்க.  அதிமுக உங்க சொத்து பட்டியல வெளியிடுங்க. அதிமுக திமுக என்கிறது எங்களுக்குள்ள இருக்கின்ற பங்காளிகள் சண்டை. எங்க நிலத்திற்குள்ள சண்டை.  மோடிக்கு இங்க என்ன வேலை ?  மோடி வராமல் ஒருவேளை ராகுல் காந்தி வந்து நின்னாலும் ராகுல் காந்திக்கு எதிர்த்து போட்டியிடுவேன் என தெரிவித்தார்.