தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மே மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் மொபைல் ரேஷன் கடைகளை செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொருள்கள் இனி வீடு தேடி வழங்கப்பட உள்ளது. அந்தந்த தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் சொந்தமாக வாகனங்களை வாங்கி அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். இதற்கான பணிகளை அந்தந்த கூட்டுறவு இணை பதிவாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.