தமிழகத்தில் மீனவர்கள் இயற்கை மரணத்திற்கான நிவாரண தொகை 15000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்படும் என மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் இது குறித்து பேசிய அவர், கடலில் மீன் பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவரின் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 250 ரூபாயிலிருந்து 350 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 500 வீணாக இளைஞர்களுக்கு மீன்பிடி படகு ஓட்டுனர் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் உபகரணங்கள் வாங்க ஆயிரம் மீனவருக்கு ஒரு கோடி மானியம் வழங்கப்படும். இந்த அறிவிப்பு மீனவ குடும்பங்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.