மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குரு பங்காரு அடிகளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில் மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் அமைந்துள்ள பிரபல சிற்பக்கூடத்தில் இவரது கற்சிலையை முருகன் மற்றும் அவரது குழுவினர் செதுக்கி வந்துள்ளனர். அப்போது இந்த சிலையை நேரில் பார்க்க பங்காரு அடிகளாரின் மனைவி லஷ்மி அம்மாள் வந்துள்ளார்.

அவர் அந்த சிலையை பார்த்ததும் கண் கலங்கினார். பின்னர் அவரது சிலைக்கு பூஜைகள் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சிலையை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் வைத்து வழிபாடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.