தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பெஞ்சமின், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மாலை தனது வீட்டு அருகே உள்ள கக்கன் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, பூங்காவில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்த இரண்டு நபர்களை தட்டிக் கேட்டதால், அவர்கள் கத்தியால் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதில் பெஞ்சமின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் பெஞ்சமின் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.