தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக களப்பணிகளை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக நேற்று கோயம்புத்தூரில் தன்னுடைய களப்பணிகளை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக கோயம்புத்தூரில் அவர் களப்பணிகளை தொடங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதாவது கோவை அனுப்பர்பாளையத்தில் அமையும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில் இந்த திட்டம் 300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடி அளவில் அமைகிறது. அதன் பிறகு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, கோயம்புத்தூருக்கு மீண்டும் செந்தில் பாலாஜி Come back கொடுத்துள்ளார். கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு செந்தில் பாலாஜி மீண்டும் வந்துள்ளார்.
அவருடைய சிறப்பான மற்றும் வேகமான செயல்பாடுகளை பார்த்து சில தடைகளை ஏற்படுத்தினார்கள். தடைகளை எல்லாம் உடைத்து மீண்டும் செந்தில் பாலாஜி வந்துள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என்றும் கூறினார். மேலும் முன்னதாக சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு வருடமாக சிறையில் இருந்த நிலையில் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது மீண்டும் மதுவிலக்கு, ஆயதீர்வை துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி வெளியே வந்ததை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின் தற்போதும் செந்தில் பாலாஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.