ராஜஸ்தான் பாலி அருகில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலின் 8 பெட்டிகள் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. மார்வார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள்ளாக விபத்து நடைபெற்றதாக பயணி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார்.

8 பெட்டிகள் தடம் புரண்டதில் 11 பெட்டிகள் சேதமடைந்துள்ளது. இதற்கிடையில் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ரயில்வே துறை தனிபேருந்து ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் ரயிலில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அழைத்து வர, ஜோத்பூரிலிருந்து ஓர் உதவி ரயில் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரையிலும் இச்சம்பவத்தால் பெரிய அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.