ஈரோட்டில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அவர் டென்ஷன் பண்ணாதீங்க அமைச்சர் முத்துசாமி அண்ணனை வர சொல்லுங்கள் என்று ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுபானம் குடித்து மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றுள்ளார். அதனைப் பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்க முயற்சி செய்தனர். அப்போது காவலர்களிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.