சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மழையை எதிர்கொள்ள நகராட்சிகளில் 4,000க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் தயார் நிலையில்உள்ளனர். கடலோர மாவட்டங்களை கவனிக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மழை தொடர்ந்து பெய்கிறதா என கண்காணித்து வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.