திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடன் வாங்கி பல தொழில்கள் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வக்குமார் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் தீன தயாளன், விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த லட்சுமி, கோயம்புத்தூரை சேர்ந்த ஒருவர் என மூன்று பேரிடம் 20 லட்சம் ரூபாய் பணத்திருக்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். இதனால் மன உளைச்சலில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

முன்னதாக தனது இறப்பிற்கு காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக குடும்பத்தினருக்கு வீடியோ அனுப்பி விட்டு செல்வகுமார் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செல்வகுமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.