திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கனிக்கிலுப்பை கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி காவியா ஸ்ரீ என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி குடித்துள்ளார்.

அதாவது 10 ரூபாய் மதிப்புள்ள கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி சிறுமி குடித்தார். இதை குடித்த சிறிது நேரத்தில் சிறுமியின் வாயில் நுரை தள்ளியதோடு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.