நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் விஜயவாடா இடையே செப்டம்பர் 24 அதாவது இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு விஜயவாடா சென்றடையும். விஜயவாடாவில் பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை வந்தடையும். மேலும் நெல்லூர் மற்றும் ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.