தமிழகத்தில் இயங்கும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூர்பாலைகள் மின்சார நிலை கட்டணத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை கருதி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.

அதன்படி பருவ கால தேவைகளுக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்ட மின் வலுவை கொண்ட தாழ்வாழ்ந்த ஆலைகளுக்கு கட்டடத்தை குறைத்துக் கொள்ளும் விதமாக தற்போது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நிறுவனங்கள் மின்பளு தேவைக்கு ஏற்ப குறைத்துக் கொள்ளலாம் மற்றும் உயர்த்தி கொள்ளலாம் எனவும் இதற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சூரிய ஒளி சக்தி மேற்கூரை மூலம் மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.