சென்னையில் புறநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காக இந்த புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் இந்த சேவைகளை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்த புறநகர் ரயில் சேவைகளை செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை, தாம்பரத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த புறநகர் பேருந்துகளில் ஏசி பெட்டிகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏசி பெட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் கால அவகாசம் வருகின்ற மார்ச் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் விரைவில் ஏசி பெட்டிகள் அமைக்கப்படும் என தெரிகிறது.