மும்பையில் உள்ள மாங்காடு ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரு இளைஞரை சரமாரியாக தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகளில், இளைஞரைச் சுற்றி வளைத்து அவரை கொடூரமாக தாக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெளிவாக தெரிகின்றனர். இதனைத் தடுக்க முயன்றவர்களை மிரட்டிவிட்டு தாக்குதலை தொடர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், இளைஞரை பெல்ட்டால் தாக்கியதும் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் அவர்கள் எதற்காக வாலிபரை தாக்கினார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதால் இந்த வீடியோ குறித்து மும்பை போலீசார் கவனம் செலுத்தியுள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.