பெரம்பூர் பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் பெரியபாளையத்தம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் முருகன் (50). இவர்க்கு கலாவதி என்ற மனைவி உள்ளார். உமா சங்கர், மாலினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் ரயில்வே நிலையத்தில் நடைமேடை டிக்கெட் வாங்க வந்துள்ளார். அப்போது கால் தவறி சுரங்கபாதையில் உள்ளே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் சுரங்கப்பாதை நீரில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அறிவிப்பு ஒன்று வந்தது. இந்த தகவலின் பெயரில் பெரம்பூர் ரயில் பாதை காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த முருகனின் சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சுரங்கப்பாதையில் செருப்பு தைக்கும் தொழிலாளி விழுந்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.