
SBI மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் ரூபாய்.10 லட்சம் வரை பிணைய இலவச கடனை வழங்குகிறது. SBI எஸ்ஹெச்ஜி ஸமூஹ் சக்தி கேம் பெய்ன் வாயிலாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த பெரிய கடன் தொகை வழங்கப்படுகிறது. இது அக்டோபர் 1, 2022 அன்று துவங்கப்பட்ட நிலையில், 2023, மார்ச் 31 அன்று முடிவடையும். இத்திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மகளிர் குழுவுக்கு ரூபாய்.3 லட்சம் வரையிலான கடனுக்கு வட்டி விகிதம் 7% ஆக இருக்கிறது. ரூபாய்.3 -5 லட்சம் வரையிலான வட்டி விகிதமானது 1 வருடம் எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கடன் வசதிகளை வழங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களை SBI வங்கி மேம்படுத்துகிறது என வங்கி அதன் அதிகர்பூர்வமான பக்கத்தில் டுவிட் செய்திருக்கிறது. 2022 ஆம் வருடம் மார்ச் 31 நிலவரப்படி 8.71 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி சுமார் ரூபாய்.24,023 கோடி கடனை வழங்கி உள்ளது. SBI சுய உதவிக்குழுக்களில் இருப்பவர்களுக்கு வருமானம் ஈட்டும் அடிப்படையில் வீட்டு வசதி, கல்வி, திருமணம் மற்றும் கடன் ஆகிய சமூகத்தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்ய கடன்களை வழங்குகிறது.
ரிசர்வ் வங்கியின் அடிப்படையில், FIDD.GSSD.CO.BC. எண்.09/09.01.003/2021-22, 09 ஆகஸ்ட் 2021, DAY-NRLMன் கீழ் சுய உதவி குழுக்களுக்கான பிணைய இலவச கடன் ரூபாய்.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதிர்ச்சி அடைந்த சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியின் விருப்பப்படி சேமிப்பின் 4 மடங்குக்கு மேல் கடன்கள் வழங்கப்படலாம். ரூபாய்.10 லட்சம் வரை கொடுக்கப்படும் கடனுக்கு மார்ஜின் எதுவும் விதிக்கப்படாது.