இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விரும்புவார்கள். ஆனால் குறைந்த முதலீட்டில் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இணையலாம் என்பதை பலருக்கும் பெரும் குழப்பமாக இருக்கும். இந்நிலையில் மாதம் 500 ரூபாய் முதலீட்டில் உள்ள ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டம் கடந்த 10 வருடங்களில் 80 சதவீதம் வரை அதன் முதலீடுகளின் மீது லாபத்தை வழங்கியுள்ளது.

இது குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பிஎஸ்சி 200 இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்கிறது. இந்த திட்டத்தின் குறைந்த முதலீட்டு தொகை ரூபாய் 500 ஆகும். இந்த திட்டத்தில் லாக் கின் காலம் இல்லை. ஆனால் இந்த திட்டத்தில் முதலீடு செய்து விட்டு 365 நாட்களுக்குள் வெளியேறினால் 10% உங்கள் முதலீட்டு தொகையிலிருந்து கட்டணமாக பிடித்துக் கொள்ளப்படும். மேலும் ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன்பாக உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்ய வேண்டும்.