சித்தார்த்தும் அதிதிராவும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல பல சந்தர்ப்பங்களில் சித்தார்த்தும் அதிதியும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வட்டம் அடித்து வந்துள்ளன. 2022 ஆம் ஆண்டு சித்தார்த்த பிறந்தநாள் அன்று அதிதி போஸ்ட் செய்த பதிவும் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்து வரும் மாலை டம் டம் பாடலுக்கு சித்தார்த்துடன் இணைந்து அதிதி ரீல் செய்துள்ளார். இதை அடுத்து இது வெறும் டிரெண்டுக்காக செய்யப்பட்டதா? அல்லது தங்களின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி அறிவிக்க போகின்றனவா? போன்ற கேள்விகள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.