லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் லியோ திரைப்படம் எல் சி யு வில் இணையுமா என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. அதன்படி லியோ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை 120 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதே போல சாட்டிலைட் உரிமையை சன் டிவி 70 கோடிக்கு வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமை 30 கோடி ரூபாய்க்கும் ஓவர் சீஸ் ரிலீஸ் உரிமை  கோடி ரூபாய்க்கும் தமிழக திரையரங்குகளில் ரிலீஸ் உரிமை 25 கோடி ரூபாய்க்கும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் உரிமை 35 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறப்படுகிறது. ஆனால் வாங்கியவர்களின் விவரங்கள் வெளியாகவில்லை. இதே போல் வட இந்தியாவில் ரிலீஸ் உரிமை 35 கோடி ரூபாய்க்கும் ஆடியோ உரிமை 18 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனதாக கூறப்படுகிறது.