திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு 23.08.2026 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் தங்கும் வசதிகள் மற்றும் விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, விடுதியில் தங்கியிருந்த மாணவர்களிடம் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மாணவர்கள் தங்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாணவர்களுடன் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்ட அமைச்சர், உணவின் தரம் மற்றும் வழங்கப்படும் முறையை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கிறதா என்பதையும் அவர் உறுதி செய்தார்.

“>

 

இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். மாணவர்களின் நலன் மற்றும் விடுதி வசதிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சரின் நடவடிக்கை மாணவர்கள் மற்றும் கல்வி வட்டாரத்தினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.