தமிழகத்தில் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் தொகுப்பூதியம் கூடுதலாக 2500 ரூபாய் வழங்கப்படும் எனவும் 10 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.