உத்தரபிரதேச மாநிலம் பரெய்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரிடம் அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னிடம் பேசுமாறு தொல்லை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியை விரட்டி அந்த நபர் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த சிறுமி சாலையில் கிடந்த கற்களை எடுத்து அந்த நபரின் மீது வீசி தாக்க துவங்கியுள்ளார். இதை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தான கட்டத்தில் சிறுமி செய்த துணிச்சலான காரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“>