இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கின் மனைவி கமலேஷ் தாக்கூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். டேராவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் கமலேஷ் தாக்கூர் போட்டியிடுகிறார். அவருடைய பெயரை காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியானது நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.இமாச்சலப் பிரதேசம், ஹமிர்பூர், நாலாகா மற்றும் டேரா ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.