சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரில் நவீன்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் நவீன் நதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவீன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் நதியா மீது சந்தேகப்பட்டு நவீன் அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் கோபத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவீனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.