கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம் ஆண்டு திடீரென சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி  கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவரது தந்தையே அவரை பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் மஞ்சேரி போக்சோ  விரைவு கோர்ட்டில்  இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேஷ் சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் ரூ.6.60 லட்சம் அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளார்.