மத்திய உயர் கல்வித் துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, பள்ளிக் கல்வித்துறை செயலர் சஞ்ஜய்குமார் போன்றோர் கூறியிருப்பதாவது “கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பிலான கருத்தரங்கில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையானது திறன் மேம்படுத்தும் பள்ளிக் கல்வியிலிருந்து தொடங்குகிறது.

பள்ளியில் இடை நிற்றலை குறைத்தல், பள்ளிக்கல்வி, தொழிற்கல்வியை மேம்படுத்துதல், திறன் மேம்பாட்டு பயிற்சி தருதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக அடுத்தடுத்த தினங்கள் நடைபெறும் கல்வி செயற்குழு கூட்டத்தில் பேசப்படும். வருகிற , 2025 ஆம் வருடத்திற்குள் குறைந்தபட்சம் 50% பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அது 2030-க்குள், 100% ஆக வேண்டும். இதுவே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கமாகும். அதோடு இன்னும் ஒன்றரை வருடங்களில் தேசிய கல்விக்கொள்கையானது அமலுக்கு வரும்” என்று அவர்கள் கூறினர்.