மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் (26) லோகட் கோட்டைப் பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது வருங்கால மனைவி சியா கோயல் குற்றத்தைச் மறைக்க விபத்து போல அரங்கேற்றிய நாடகத்தின் புதிய அதிர்ச்சித் தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன.

கடந்த ஜூன் 18 அன்று நடைபெற்ற இச்சம்பவத்தின் போது லோகட் மைதானப் பகுதியில் பணியில் இருந்த பாதுகாப்புக் காவலர் தீரஜ் ஜாதவ் அளித்துள்ள சாட்சியத்தில், “அன்று காலை திடீரென அலறல் சத்தம் கேட்டு நான் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, சியா கோயல் மிகுந்த பயத்துடன் உதவிக்காகக் கத்திக் கொண்டிருந்தார்; கேதன் அகர்வால் தவறி விழுந்துவிட்டதாக அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும் கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.

தனது கள்ளக்காதலன் சேத்தன் சௌத்ரியுடன் இணைந்து, திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என்ற பெயரில் கேதனைத் திட்டமிட்டு ஆள்நடமாட்டமில்லாத பள்ளத்தாக்கு பகுதிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட்ட சியா கோயல், கொலையைச் செய்த அடுத்த ஐந்து நிமிடங்களில் தானாகவே முன்வந்து உதவிக்குக் கூச்சலிட்டு, அது ஒரு ‘செல்ஃபி விபத்து’ போல ஊரறிய நாடகமாடியது தற்பொழுது காவல்துறையின் தொழில்நுட்ப விசாரணையில் அம்பலமாகி, இருவருமே கொலைக் குற்றச்சாட்டின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளனர்.