முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர் 29ஆம் தேதி உடன் நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது கால அவகாசம் அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://gate2024.iisc.ac.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.