தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கினார். அதன் பிறகு கடந்த மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த நிலையில் சுமார் 8 லட்சம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் தன்னுடைய கட்சி கொள்கைகள் உள்ளிட்ட பல தகவல்களை விஜய் வெளியிட்டார். சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் விஜய் 26 தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
தன்னுடைய முதல் அரசியல் எதிரி திமுக என்று கூறிய அவர் பாஜகவை கூட மறைமுகமாக விமர்சிக்கிறார். தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு செயலி மூலம் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு மாதத்தில் மட்டும் தமிழக வெற்றி கழகத்தில் கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் இணைந்துள்ளதாக ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. இந்த செயலியில் பலர் விண்ணப்பிப்பதால் சிறிது நேரம் சர்வர் பிரச்சனையால் செயலி முடங்குகிறது. இருப்பினும் அது சரி செய்யப்பட்டு மீண்டும் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்தில் குறிப்பிட்ட காலத்தில் 25 லட்சம் பேர் இணைந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.