தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம் புதிதாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் 320 பள்ளிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 357 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சென்னையில் 37 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் கூடுதலாக 32 பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த காலை சிற்றுண்டி திட்டம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.