தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் கடும் குளிர் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. குளிர் அலை வீசி வருவதால் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர்,டெல்லி மற்றும் உத்தர பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குளிர் அலை மற்றும் மோசமான மூடு பணியால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி பத்தாம் தேதி முதல் குளிர் குறையும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.