குருங்குளத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரம் உள்ள குருங்குளத்திற்கு நாஞ்சிக்கோட்டை மறுங்குளம் வழியாக ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வசித்து வரும் மக்கள் இந்த பேருந்து மட்டுமே நம்பியுள்ளனர். அதன் காரணமாக இந்த பேருந்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் மருங்குளம், வாகரகோட்டை, மின்னத்தூர்,ஏழுப் பட்டி போன்ற பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்கும், தஞ்சை பகுதியில் உள்ள கடைகளுக்கு வேலைக்கு செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. அதன் காரணமாக ராஜ்கோட்டை குருங்குளத்துக்கு மறுங்குளம் வழியாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.