இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பவர் ரிஷப் பண்ட். இவர் உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த கார்‌ சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் மருத்துவமனையில தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஏற்கனவே முழங்காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைதுதொடர்ந்து மீண்டும் ரிஷப் பண்டுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது இன்னும் 6 வாரங்களுக்கு பிறகு ரிஷப் பண்டுக்கும் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார்களாம். ரிஷப் விரைவில் குணமடைந்து அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மேலும் இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ரிஷப் பண்ட் அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும், உலக கோப்பையிலும் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.