டெல்லி சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை நடைபெற்ற நிலையில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் கையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் கியாஸ் முக கவசங்களுடன் வந்தனர். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து எம்எல்ஏ விஜேந்தர் குப்தா ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 2 கோடி டெல்லி மக்களின் குரலாக ஆக்சிஜன் கியாஸ் சிலிண்டர்களை ஏந்தியபடி வந்தோம். டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் ஆக்ஸிஜன் அறையில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

ஆம் ஆத்மி அரசு டெல்லியை காற்று மாசுபாட்டில் இருந்து காப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை கூற வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் இன்று காற்று தர குறியீடு 337 ஆக இருக்கிறது. மேலும் கட்டிட பணிகள் உள்ளிட்ட அத்தியாவசியமான காற்று மாசுபாடு ஏற்படும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து காற்று மாசுபாடு ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.