தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்திற்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்படும் காலி மனைகளை தவிர்த்து அனைத்து காலி மனைகளுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் காலியிட வரிவிதிப்பு செய்த பின்னரே பத்திரப்பதிவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.