தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது வரை முன்னணி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே சமயம் சிம்பு மற்றும் பிரபுதேவா உடன் காதல் என்று சர்ச்சையில் சிக்கிய இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ள நிலையில் தற்போது நயன்தாரா மாதவன் மற்றும் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் டெஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நயன்தாரா தனது மகனுடன் காரில் பயணிக்கும் காட்சியை வெளியிட்டுள்ள நிலையில், மகன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது ஆசையாக முத்தமிட்டு தனது பாசத்தை வெளிக்காட்டி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.