நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட பொருளாளர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, கவிஞர் குணசேகரன், கிளை தலைவர் குழந்தைவேலு, கவிஞர் வேதாரத்தினம், துணை செயலாளர் செந்தில்நாதன், நாட்டுப்புற பாடகர் கோவில் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசியுள்ளனர். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு சென்னையில் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ள இந்து சமஸ்கிருத திணிப்புக்கு எதிரான கருத்தரங்கில் பங்கேற்பது. அதேபோல் வருகிற 21-ஆம் தேதி ஆயக்காரன்புலத்தில் உலக தாய்மொழி நாள் கருத்தரங்கம் நடத்துவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற நிறைவேற்றப்பட்டுள்ளது.