பிரபல கர்நாடக இசைக்கலைஞரும் மலையாள நடிகர் மனோஜின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சபரிமலை கோவிலில் தினமும் நடை திறக்கப்படும்போது இவர் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியுள்ள இவர், ஒரு சில மலையாளப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.