கரூர் மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசினார். அவர் பேசியதாவது, மூத்த அமைச்சர்களுக்கு முக்கியமான துறைகளை ஒதுக்கினால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதற்காக தான் ஜூனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய பதவிகளை வழங்கி வருகிறார்.

முக்கிய பொறுப்புகளை அவர் மூத்த அமைச்சர்களுக்கு கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சரியாக கப்பம் கட்ட மாட்டார்கள். ஆனால் செந்தில் பாலாஜி மட்டும் தான் அதற்கு தகுந்தவர். ஏனெனில் அவர்தான் சரியான முறையில் கப்பம் கட்டுவார். அரசு அதிகாரிகள் அதிகார வரம்பை நேர்மையாக பயன்படுத்துங்கள். இல்லையெனில் அரசியல்வாதிகளைத் தாண்டி அதிகாரிகளை நோக்கி எங்கள் போராட்டம் நடைபெறும். மேலும் காவல்துறை பொய் வழக்குகளை போட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடைபெறும் என்று கூறினார். ‌