மேகாலயா மாநிலத்தின் ஒரு கிராமப்புற பகுதியில் வசித்து வரும் சுமார் 100 வயது நிரம்பிய மூத்த பாட்டி ஒருவர், இந்தத் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியும் இல்லாமல் தன்னிச்சையாகச் சுறுசுறுப்புடன் வாழும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியாகி இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில் தனது நீண்ட ஆயுளின் ரகசியம் குறித்துப் பேசியுள்ள பாட்டி, தான் பல வருடங்களாக மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், தனது தினசரி உணவில் உருளைக்கிழங்கு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ankita Kumar 🇮🇳| TRAVEL (@monkey.inc)

அதோடு நின்றுவிடாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசியமான பக்கத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்; அதாவது, தனது இளம் வயதிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியதாகவும், பல வருடங்களாகத் தான் தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

எந்தவொரு மன அழுத்தமும் இல்லாமல், சுதந்திரமாக வாழும் இந்தத் தனிமையான வாழ்க்கை முறையே தன்னை இத்தனை காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியதாக அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வயதிலும் வீட்டு வேலைகள் அனைத்தையும் தானே இழுத்துப் போட்டுச் செய்யும் இந்தப் பாட்டியின் தன்னம்பிக்கையையும் சுறுசுறுப்பையும் பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள், “ஆரோக்கியத்திற்கு உருளைக்கிழங்கு மட்டும் காரணமல்ல, பாட்டியின் உழைப்பும், மன அமைதியும், கவலை இல்லாத வாழ்க்கையும்தான் நிஜமான ரகசியம்” எனத் தங்களது வாழ்த்துகளையும் கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் அள்ளி வீசி வருகின்றனர்.