உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சந்திரா. பாணி பூரி விற்பனை செய்யும் இவர் சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த ஒரு கும்பல் இலவசமாக பாணி பூரி கேட்டு தகராறு செய்துள்ளது.
பிரேம் சந்திரா பானி பூரி கொடுக்க மறுத்ததால் அந்த கும்பல் அவரை கடுமையாக தாக்கியுள்ளது. அக்கம் பக்கத்தினர் பிரேம் சந்திராவை காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு பிரேம் சந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.