சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. பொதுவாகவே பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டு உள்ளது. அதன்படி சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இங்கிருந்து தான் தமிழக மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் மல்லிகை பூ அனுப்பி வைக்கப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு மளிகை பூ தேவை அதிகரித்துள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ஆயிரம் ரூபாயாக மல்லிகை பூ விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.