நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் நடேசன் (65) சிந்தாமணி (55) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நந்தகுமார் என்ற 36 வயதுமிக்க ஒரு மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் மூன்று பேரும் தங்களது வீட்டில் ஒரே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இவர்களின் தற்கொலைக்கு காரணம் கடன் தொல்லையா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.