கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து பிறந்த கேட், ஈவ், மேரி என்ற 3 சகோதரிகள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த 3 சகோதரிகளையும் ஸ்டீவோ என்ற வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். முதலில் கேட்டை ஸ்டீவோ காதலித்து வந்த நிலையில், மற்ற இரு சகோதரிகளை சந்தித்து பேசி உள்ளார். அவர்களுக்கும் ஸ்டீவோ மீது காதல் ஏற்பட்டதால் சகோதரிகள் 3 பேரும் சேர்ந்து ஸ்டீவோவை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் 3 மனைவிகளுடனும் வாலிபர் அட்டவணை போட்டு வாழ்ந்து வருகிறார். அதாவது திங்கள்கிழமை மேரியுடனும், செவ்வாய்க்கிழமை கேட்டுடனும், புதன்கிழமை ஈவ்வுடனும் ஸ்டீவோ வாழ்ந்து வருகிறார். மேலும் 3 பேருடன் சேர்ந்து வாழ்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றும் ஸ்டீவோ கூறியுள்ளார்.