ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதில் இன்னும் 101 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. உடல்களை அடையாளம் காணுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் 80 பேரின் உடல்களை உறவினர்கள் கண்ணீருடன் பெற்று சென்றனர்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசின் குழு இன்று முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாக அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் சென்று சென்னை திரும்பி உள்ளனர். இந்த குழு களநிலவரம் குறித்து விரிவான அறிக்கையாக தயார் செய்து இன்று முதல்வரிடம் சமர்பிக்க உள்ளது. ரயில் விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.